Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2018 ஜூன் 29 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைநாட்டு புதிய கிராம அதிகார சபையை ஸ்தாபிப்பதன் மூலம், தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை வரலாற்றில் மலையகத்துக்கான ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைப்பதாக, கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராம அதிகார சபை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளமை தொடர்பில்,தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
மலையகப் பெருந்தோட்டத்துறை தொழிலாளர் மக்களின் அபிவிருத்திப் பின்னடைவுகளுக்கு, அரச பொது நிர்வாகப் பொறிமுறைக்குள் அவர்கள் உள்ளீர்க்கப்படாமையே பிரதான காரணமாகும் என்று சாடிய அவர், 1996 ஆம் ஆண்டு அவர்களுக்கென ஓர் அமைச்சு நிறுவப்பட்டபோதும், அந்த அமைச்சினால் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஓர் அரசத் திணைக்களமோ, கூட்டுத்தாபனமோ, அதிகார சபையோ இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.
“தற்போதைய மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் நிலைகூட அதுதான். அதனை நிவர்த்திக்கும் பொருட்டே, மலைநாட்டு புதிய கிராம அதிகார சபை உருவாக்கப்படுகின்றது. இதன்மூலம், தமிழ் முற்போக்குக் கூட்டணி இலங்கை வரலாற்றில் மலையகத்துக்கான ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கிறது” என்றார்.
4 minute ago
10 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
11 minute ago