R.Maheshwary / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
மலையகத்தின் சில பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுபாடு நிலவுவதால் மக்கள் சிரமத்தை சந்திப்பதாக கவலைத் தெரிவிக்கின்றனர். இதனால் தாம் நாளந்தம் மேற்கொள்ளும் பணிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தற்போது மலையகத்தில் வரட்சியான காலநிலை நிலவுவதால் ஆறுகளிலும் நிரோடைகளிலும் நீர் குறைவடைந்து செல்வதுடன் காடுகளுக்கு தீவைப்பு சம்பவங்களும் அதிகரித்துள்ளமையால் குடிநீருக்கு தட்டுபாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்ள நீர் உள்ள பிரதேசங்களுக்கு தேடிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தொடர்ச்சியாக வரட்சியான காலநிலை நிலவுமாகவிருந்தால் எதிர் வரும் வாரங்களில் குடிநீருக்கு பெரும் தட்டுபாடு ஏற்படுவதற்கு சாத்தியப்பாடு நிலவுவதாகவும் கவலைத்தெரிவிக்கப்படுகின்றது.
8 minute ago
40 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
40 minute ago