2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மலையகத்துக்கான ரயில் சேவைகள் வழமைக்கு

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மலையகத்துக்கான ரயில் சேவைகளை நாளை மறுதினத்திலிருந்து வழமைபோல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே கட்டுபாட்டு அதிகாரி தெரிவித்தார்.

நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நாவலப்பிட்டி தொடக்கம் நானுஓயா வரையான ரயில் வீதியின் பல இடங்களில் மண்சரிவு, கற்கள் சரிவு என்பன ஏற்பட்டதால் மலையகத்துக்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டதாகவும் தற்போது, அதனை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே கட்டுபாட்டு அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X