Kogilavani / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதில், மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலம் தொடக்கம், முழு நாடும் முடங்கிய போதும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது வழமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்றுச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது நாட்டின் பொருளாதாரத்துக்கும் பேருதவியாக இருந்தது என்றார்.
இவ்வாறானதொரு நிலையில், மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டப் பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர் என்றும் இதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட தொழிலாளர்களும் எனையவர்களும் பாதிப்படைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, நுவரெலியா மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளிலும் ஏனைய மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதில் சுகாதார அமைச்சு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
12 minute ago
13 minute ago
17 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
17 minute ago
24 minute ago