R.Maheshwary / 2022 மே 25 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
"அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து, மலையக மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் பாரபட்சமின்றி கிடைப்பதற்குரிய முறைமை ஒன்றை முன்வைக்க வேண்டும்." என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மட்டத்திலும் உள்ள மக்கள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக குறை வருமானம் பெறுபவர்கள் தமது உணவு தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இச் சூழ்நிலையில் அரசாங்கம் விசேட நிவாரணங்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் இத்தகைய நிவாரணங்களை வழங்கும் போது, மலையக மக்களுக்கு பாராபட்சம் காட்டப்பட்டது. இந்நிலைமையை தவிர்த்துக் கொள்வதற்கு அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து, மலையக மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் பாரபட்சமின்றி கிடைப்பதற்குரிய முறைமை ஒன்றை முன்வைக்க வேண்டும்.
இந்திய அரசிடம் இருந்தும், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்தும், இரண்டு பில்லியன் பெறுமதியான நிவாரண பொருட்கள் கிடைக்க பெற்றிருக்கின்றது.
எமது நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைக்கு உதவும் விதமாக தமிழ் நாட்டு அரசே முன்வந்து இந்நிவாறான பொருட்களை பெற்றுத்தந்துள்ளது.
இதனைவைத்து, குறுகிய அரசியல் வட்டத்திற்குள் வாத விவாதம் செய்து கொள்வது இந்நேரத்தில் பொருத்தமானது அல்ல. நிவாரண பொருட்கள் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என மக்களுக்கு தெளிவாக தெரியும்.
மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் சிறுபிள்ளைத்தனமான அரசியல் செயற்பாடுகள் மக்களுக்கு மேலும் கோபத்தை தூண்டுவதாகவே உள்ளது. சூழ்நிலையை புரிந்து கொண்டு மக்களுக்கான நிவாரணங்கள் பாரபட்சமின்றி கிடைப்பதர்க்குரிய வழிமுறையை ஏற்படுத்துவதே எமது கடப்பாடாகும். அதற்கான கலந்துரையாடலை மற்றும் செயற்பாடுகளை அரச தரப்போடு நாம் பேசி துரிதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago