2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

மலையக மக்களுக்கு புதிய முகவரி சந்தாவை நிறுத்தவும் திட்டம்

ஆ.ரமேஸ்   / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகப் பெருந்தோட்டங்களில், லயன் வாழ்க்கை முறையை ஒழித்து, ஒவ்வொரு தோட்டங்களையும் கிராமங்களாக்கி அங்கு வாழ்கின்ற மக்களுக்கு புதிய முகவரியை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு, இரண்டு இலட்சத்துக்கும் அதிகப்படியான வீடுகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை, கடந்த பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கியுள்ளனர் என்றும் அரசாங்கத்துடனான பேரம்பேசும் சக்தியை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு, இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டாலும் அவ்வமைச்சானது பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், மலையகத்தில் வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திகளை, தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் எனவே, அது தொடர்பில் எவரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில், தோட்டப் பகுதிகளில் ஆங்காங்கே குறைந்தளவிலான வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதேத் தவிர முறையான அடிப்படை, உட்கட்டமைப்பு வசதிகள் செய்துக் கொடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

பெருந்தோட்ட மக்களுக்காக வீடுகளை அமைத்துக் கொடுக்கப்படும்போதும், முகவரியுடனேயே அமைத்துக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊழியர்களாக 500 பேருக்கு அதிகமானோர் பணியாற்றுகின்றனர் என்றும் இவர்களுக்கான மாத சம்பளத்துக்கு மாற்று நடவடிக்கையை மேற்கொண்டதன் பின்னர், காங்கிரஸ் கட்சிக்கான மாதாந்த சந்தாவை முழுமையாக நிறுத்துவதுத் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .