Ilango Bharathy / 2021 ஜூலை 20 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருபக்கம் அரசாங்கம் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வாலும், மறுபக்கம் பெருந்தோட்ட நிர்வாகங்களின் காட்டுமிராண்டித்தனமான நிர்வாகத்தாலும் மலையக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,எரிபொருள் விலை அதிகரிப்பால் மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மலையக மக்களுக்கு என்ன நிவாரணங்களை அரசாங்கம் வழங்கப்போகிறதெனவும் கேள்வி எழுப்பிய அவர், எவ்வாறு மலையக மக்களை வாழ வைக்கப்போகிறார்கள் என்பதற்கு ஜனாதிபதி, பாராளுமன்றமும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். அதுவே தற்போது தேவை அதற்குப் பதிலாக நீலிக்கண்ணீர் வடித்து மலையக மக்களை அரசாங்கம் ஏமாற்றக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago