2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மழையால் கூடாரங்களில் வசிப்பதிலும் சிக்கல்

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருள்ஷான்

மழையடனான வானிலையின் போது, தற்காலிக கூடாரங்களில் மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக யட்டியாந்தோட்டை -லெவன்ட் தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக மண்சரிவு அபாயம்மிக்க லயன் குடியிருப்பில் வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு, மழைக்காலங்களில் மாத்திரம் தற்காலிக கூடாரங்களை அமைத்து கொடுக்கும் தோட்ட நிர்வாகம், மழைகாலம் முடிந்தவுடன், மீண்டும் இந்த மக்களை அபாயமிக்க லயக்குடியிருப்புகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

 எனினும் இந்த செயற்பாட்டுக்கு இணக்கம் தெரிவிக்காமல், மக்கள் தொடர்ச்சியாக ,தற்காலிக கூடாரங்களில் பல மாதங்களாக வாழ்ந்து வருவதால்,  தோட்ட நிர்வாகம் இவர்களுள் பலருக்கு வேலைநிறுத்தம் செய்துள்ளது.

 தற்போது, கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் வருமானத்தை இழந்து, தற்காலிக கூடாரங்களில் வசிப்பதில் பாரியஇன்னல்களை அனுபவித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X