R.Maheshwary / 2022 ஜூலை 28 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
நேற்று (27) மாலை வட்டவளை பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக, மீனாட்சி தோட்ட லயக்குடியிருப்பு ஒன்று மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளது.
5 ம் இலக்க லயக் குடியிருப்பில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அத்துடன் வீட்டில் வசித்த இருவர் காயமடைந்து, வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் வட்டவளை- தியகல தோட்டத்தில் பாடசாலைக்குச் செல்லும் வீதியின் குறுக்கே மரம் வீழ்ந்துள்ளதால் குறித்த பாதையுடாக செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளானர்கள்.
மரத்தை அகற்றும் நடவடிக்கை தோட்ட நிர்வாகத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றது.



9 minute ago
25 minute ago
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
36 minute ago
3 hours ago