2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மவுசாக்கலை தோட்ட வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சு.சுரேந்திரன்

மவுசாக்கலை தோட்டமானது, பசறை -நமுனுகுலை பிரதான வீதியில் இருந்து சுமார் 500 அடிக்கும் மேலான மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இத்தோட்டத்துக்குச் செல்லும் பிரதான வீதி, மிகவும் சேதமடைந்த நிலையில், எவ்வித வாகனங்களும் பயணிக்க முடியாத நிலையில்  காணப்படுகின்றது.

ஓட்டோ ஒன்று கூட  செல்ல முடியாத நிலையில் மிகவும் குறுகியதாகவும் எவ்விதமான பாதுகாப்பு வேலிகளும் இல்லாமல் மிக ஆபத்தான வகையில் இவ்வீதி காணப்படுகின்றது.

இந்த பாதை வழியே தான், பசறை, நமுனுகுலை போன்ற நகரங்களுக்கு தேவைகளுக்காக அம்மக்கள் செல்ல வேண்டும் என்பதுடன், வாடகைக்கு வாகனங்களை அழைத்தால் கூட, பாதையின் மோசமான நிலைமையின் காரணமாக,  வாகன சாரதிகள் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

எனவே இப்பாதையை புனரமைத்து தருவதற்கு பதுளை மாவட்ட அரசியல் தலைமைகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X