Freelancer / 2023 மார்ச் 22 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
159ஆவது பொலிஸ் வீரர் தினம், ஹட்டன் பொலிஸ் பிரிவிலுள்ள அதிகாரி ஜயசிங்க தலைமையில், மஸ்கெலியா பொலிஸ் நிலைய விளையாட்டு திடலில் நேற்று (21) நடைபெற்றது.
இதன்போது, 1864ஆம் ஆண்டு, மாவனெல்ல பகுதியில் இரு சந்தேகநபர்களை கைதுசெய்ய முற்பட்ட போது, சந்தேக நபர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் மரணித்த ஸ்பானிஷிக்கு நினைவு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், அங்கவீனமுற்ற வீரர் ஒருவருக்கு காலை உணவு ஊட்டும் நிகழ்வும் நடைபெற்றதுடன், யுத்தத்தில் பிள்ளையை இழந்த தாய் ஒருவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .