2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

மஸ்கெலியா இந்து மாமன்றம் எதிர்ப்பு

Freelancer   / 2023 மார்ச் 30 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்.

வவுனியா, வெடுக்குநாறி லிங்கேஸ்வரர் ஆலயம் விஷமிகள் தகர்க்கப்பட்டு, விக்கிரங்கள் எறியப்பட்டுள்ளதை வன்மையாக கண்டித்துள்ள மஸ்கெலியா இந்து மாமன்றம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மஸ்கெலியா இந்து மாமன்ற செயலாளர் கூறுகையில் மதவாதம் மீண்டும் வேண்டாம், உலகின் முதல் முதற் கடவுள் சிவனே ஆகையால் எமது இலங்கை திருநாட்டில் வாழும் சகல மக்களும் இன, மத, மொழி பேதமின்றி ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நாம் வணங்கும் சகல ஆலயங்களிலும் நாமே பாதுகாக்க வேண்டும்.

இனவாதிகளாக செயற்பட கூடாது. வவுனியா வெடுக்குநாறி லிங்கேஸ்வரர் ஆலயம் மீண்டும் அதே இடத்தில் இருந்தவாறே அமைக்க சகல அரசியல் வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சு, கலாசார திணைக்களம் மற்றும்   ஜனாதிபதி முன்வர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .