Freelancer / 2023 மார்ச் 17 , மு.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக்க
கரடுகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடகும்புர பிகிரிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் (15) அதிகாலை மாடுகள் இரண்டு திருடப்பட்டுள்ளதாக அவற்றின் உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கரடுகல பொலிஸார் தெரிவித்தனர்.
மாட்டின் உரிமையாளர், வீட்டுக்கு அருகிலுள்ள வயல்வெளியில் 14ஆம் திகதி மாலை இரண்டு மாடுகளையும் கட்டிவைத்துள்ளார்.
மறுநாள் காலை, வயல்வெளிக்குச் சென்ற இரண்டு மாடுகளையும் யாரோ திருடிச் சென்றுள்ளமை தெரியவந்தது.
மாடுகள் கட்டப்பட்ட இடத்துக்கு அருகே வாகனம் ஒன்று வந்திருந்தமைக்கான அடையாளங்கள் காணப்பட்டதுடன், திருடப்பட்டுள்ள இரு மாடுகளின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கரடுகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .