Kogilavani / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
பொகவந்தலாவைப் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில், தரம் 9இல் கல்வி பயின்றுவரும் மாணவனுக்கு, கொரோனா வைரஸ் தொற்று, நேற்று (16) உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படிப் பாடசாலையின் ஆசிரியர் ஒருவருக்கு, கடந்தவாரம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், ஆசிரியருடன் தொடர்பைப் பேணிய மாணவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பிசிஆர் முடிவுகள், நேற்று (16) வெளியானபோதே, மேற்படி மாணவனுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதாக பொகவந்தலாவை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் வரதராஜன் தெரிவித்தார்.
நுவரெலியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், மேற்படி மாணவனின் வீட்டில் தங்கியிருந்து குறித்த பாடசாலையில் கல்வி கற்றுவருவதுடன், பொகவந்தலாவை செல்வகந்த பகுதியில் மேலதிக வகுப்புக்கும் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில குறித்த மாணவனும் மேலதிக வகுப்பை நடத்தும் ஆசிரியர் உட்பட 11 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
21 minute ago
22 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
26 minute ago
33 minute ago