2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

மாணவியொருவரை கர்ப்பமாக்கியவர் கைது

R.Maheshwary   / 2022 ஜூன் 22 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

15 வயதான பாடசாலை மாணவியொருவரை கர்ப்பமாக்கிய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (21) கைதுசெய்யப்பட்ட இச்சந்தேகநபர் நாவலப்பிட்டி- தொலஸ்பாகை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் மனைவி பொகவந்தலாவை- கெம்பியன் தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், மனைவியின் வீட்டுக்கு வந்த போதே, சந்தேகநபரால் மாணவி, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி ஆறு மாத கர்ப்பிணி என்றும், அவரது நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த குடும்பல நல உத்தியோகத்தர் ஒருவர், மாணவியை பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்த போதே, மாணவி கர்ப்பம் அடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X