Editorial / 2023 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவலதெனிய, எல்பிட்டியவில் அமைந்துள்ள மாணிக்கக்கல் அகழும் தளத்தில் இருந்து ஏழு கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடியதாக கூறப்படும் நபரை கைது செய்ய மாத்தளை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ள 62 வயதுடைய வர்த்தகர் இது தொடர்பில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு செய்த தொழிலதிபரின் மாணிக்கக்கல் அகழ்வு தளத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரியும் நபரே மாணிக்கக்கல் அகழ்வின் போது கிடைத்த ஏழு கோடி பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏழு கோடி மதிப்பிலான மாணிக்கக்கல்லை திருடிச் சென்றவர் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
9 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
1 hours ago