R.Maheshwary / 2022 ஜூலை 18 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரதன் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மிகவும் நீண்ட நாட்களாக அனுமதி பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட 08 பேர் ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்ததனையடுத்து விசேட குழு ஒன்று நேற்று (17) மாலை சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளது.
இதன் போது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஸ்ரதன் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் நாளை (19) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago