Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 19 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.பிரபா
பெண்களின் வாழ்வுக்கான சம்பளம், சேமஇலாப விடயங்கள் மற்றும் தொழில் ரீதியாக கிடைக்க வேண்டிய கௌரவம் என்பவற்றை முறையாக நடைமுறைப்படுத்த கொள்கைகளையும் திட்டங்களையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி பொன்னையா தெய்வானை கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹட்டன் பகுதியை சேர்ந்த 25 பெருந்தோட்டங்களின் பெண்களை அங்கத்தவர்களாக கொண்டு இயங்கி வரும் இந்த விடிவெள்ளி பெண்கள் அமைப்பு ஹட்டனில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அங்கு கருத்துரைத்த அவர், கீழ்கண்ட கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
மலையக பெண்கள், கர்ப்பிணி தாய்மார் மற்றும் பிள்கைளின் போசக்கு தற்போது பெரும் சவாலுக்கு உட்பட்டுள்ளது. எனவே அதனை நிவர்த்திக்க அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்கள் செயற்படுத்த வேண்டும்.
தோட்டப்புறங்களில் இயங்கும் கோயில் அரங்காவலர் சபை மற்றும் நலன்புரி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு மிக மிக குறைவாக குறைவாகவே காணப்படுகின்றது எனவே இவற்றில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் முன்மொழிய வேண்டும்.
வீட்டு வேலைத் தொழிலில் ஈடுப்படும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் 189வது சரத்தினை இலங்கையில் அமுல்படுத்த அரசாங்கம் உடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கருப்பையா தெய்வானை கோரிக்கை விடுத்துள்ளார்.
மாதாந்த சுகயீனத்தின் (மாதவிடாய் காலம்) போது பெண்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளத்துடனான விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழில் சுமையை அல்லது தொழில் நேரத்தை அதிகரிப்பதால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே பெண் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ஆம் திகதி பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து செயற்படுத்த வேண்டும் என்பதுடன் பெருந்தோட்டதுறையில் பணிபுரியும் பெண்களை வனவிலங்கு தாக்குதல் மற்றும் இயற்கை அனர்த்தம் என்பவற்றில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடன் மேற்கொள்ள வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago