Editorial / 2019 ஜனவரி 25 , பி.ப. 06:23 - 1 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத் தொடரிலிருந்து, சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரான எஸ்.சிவரஞ்சனி வெநடப்புச் செய்துள்ளார்.
நுவரெலியா மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர், சபையின் தவிசாளர் சந்தனலால் கருணாரத்னவின் தலைமையில், மாநகரசபையின் கூட்ட மண்டபத்தில், இன்று (25) காலை நடைபெற்றது.
கூட்டத்தொடரின் ஆரம்பத்தில், இறுதியாக நடைபெற்றக் கூட்டத்துக்கான அறிக்கை வாசிக்கப்பட்டது. இதனைக் கேட்டுக்கொண்டிருந்த உறுப்பினர் எஸ்.சிவரஞ்சனி, அவ்வறிக்கையை நிராகரித்து கருத்துகளை வெளியிட்டதுடன், அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்தார்.
இதன்போது கருத்துரைத்த அவர், கடந்த 28ஆம் திகதியன்று இடம்பெற்ற மாநகரசபையின் மாதாந்தக் கூட்ட அறிக்கையை தான் நிராகரிப்பதாகவும் அன்றையக் கூட்டத்தில், நுவரெலியா நகரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கற்பக விநாயகர் கோவிலின் கட்டுமான பணிக்கு, மாநகர சபை முழுமையான ஆதரவைத் தருவதாகப் பாசாங்குக் காட்டிவிட்டு, அதற்கு முன்பாகதாகவே (24.12.2018) கோவிலின் கட்டுமாணப் பணிகளை இடைநிறுத்துமாறு, கோவிலின் நிர்வாக சபைக்கு, கடிதம் அனுப்பியதைத் தான் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
கற்பக விநாயகர் கோவிலின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கோரி தனிநபர் ஒருவர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளாரென்றும் இந்த வழக்கை, மேல் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (21) விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளதென்றும் சுட்டிக்காட்டிய அவர்,
கோவிலின் கட்டுமானப் பணியை நிறுத்துவதற்கு, நீதிமன்றம் எவ்விதத் தடையுத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், ஆனால் நுவரெலியா மாநகர சபை, குறித்த தனிநபருக்குச் சார்பாக, கோவிலின் கட்டுடுமான பணியை நிறுத்துவதற்கு, கடிதம் மூலம் அறிவிப்பு விடுத்துள்ளதாகவும் சாடினார்.
இதனூடாக, நுவரெலியா மாநகரசபையானது, நுவரெலியாவில் வாழும் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டதாக அவர் சாடினார்.
நுவரெலியா வாழ் தமிழர்களின் அபிலாஷைகள், தேவைகளை நிறைவேற்றவே, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினராகச் சபைக்குத் தெரிவாகியுள்ளதாகவும் எனினும் தான் கொண்டுவரும் அபிவிருத்தித் தொடர்பான பிரேரணைகள் நிராகரிக்கப்படுவதுடன், மாநகர சபையின் ஆளுந்தரப்பு, ஒரு கட்சி சார்பாக செயற்பவடுதைத் தான் உணர்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழர்களின் எதிர்பார்புகளை நிறைவேற்ற முடியாத, முதுகெலும்பற்ற தமிழ் பிரதநிதியாக தான் சபையில் அமர்ந்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், எனவே, மாதாந்தக் கூட்டத்தை பகிஷ்கரிப்பு செய்து, தான் வெளிநடப்பு செய்வதாகவும் அறிவித்துவிட்டு, அவர் கூட்டத் தொடரிலிருந்து வெளியேறினார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
Sathiyapragash Friday, 25 January 2019 03:43 PM
சரியான முடிவு ஏனைய தமிழ் மாநகர சபை உருப்பினர்களும் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும் அதனை செய்யாமல் இருந்திருக்கும் பட்சத்தில் மக்களின் வாக்குகலை பெற்று சபையில் வரபிரசாதங்களை அனுபவிப்பதற்காக தமிழ் மக்களின் வாக்குகளை பேற்றுக்கொண்டு அந்த மக்களுக்கு துரோகம் செய்வதாகவே உணர முடிகிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago