2026 ஜனவரி 21, புதன்கிழமை

மாத்தளையில் கொரோனாவால் 140 பேர் மரணம்

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

கொரோனா தொற்றால் மாத்தளையில் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனரென, மாத்தளை மாவட்ட சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மாத்தளை மாவட்டத்தில் 115 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவரை 7,529 தொற்றாளர்கள் மொத்தமாக பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 1,504 தொற்றாளர்கள் உக்குவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன்,இரத்தோட்டையில் 841, மாத்தளையில் 557 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது மாத்தளை மாவட்டம் முழுவதம் 426 குடும்பங்களைச் சேர்ந்த 1.004 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் மாத்தளை மாவட்ட சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X