Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திரவிராஜ் அபயசிறி
மாத்தளை மாவட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் 2,232 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 10 பேர் மரணமடைந்துள்ளதாகவும் மாத்தளை பிரதேச வைத்தியர் வசந்த பண்டார தெரிவித்தார்.
உக்குவலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 509 டெங்கு நோயாளர்களும் மாத்தளை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் 414 பேரும் கலேவெல பகுதியில் 288 பேரும், ரத்தொட்ட பகுதியில் 245, மாத்தளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்து 165, தம்புள்ள நகரசபை மற்றும் அதனை அண்மித்தப் பகுதிகளில் 94, தம்புள்ள பிரதேச சபை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 127, பல்லேபொல 58, வில்கமுவ 80, நாவுல 60, அம்பன்கக 42, லக்கல 16 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாத்தளை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையில், சுமார் 40,000 இடங்கள் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ரத்தொட்ட, உக்குவெல ஆகியப் பகுதிகளில் பொதுக்கிணறுகள் மற்றும் நீர்தாங்கிகள் என்பன சுத்திகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago