2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மாத்தளையில் தொற்றின் வேகம் அதிகரிப்பு

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக ஏற்றிக்கொள்ளுமாறு மாத்தளை மாவட்ட சுகாதாரப் பிரிவினர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதற்கமைய ​இந்த மாதத்தின் முதல் ஆறு நாள்களுக்குள் 5 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், இதில் நால்வர் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டரைப் ஏற்றிக்கொள்ளாதவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த மாதம் ஆரம்பப் பகுதியில் ஒக்சிஜன் தேவையுடைய எந்தவொரு ​தொற்றாளரும் மாத்தளை மாவட்டத்தில் காணப்படாத நிலையில், கடந்த இரண்டு நாள்களில் ஒக்சிஜன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .