2025 மே 01, வியாழக்கிழமை

மாத்தளையில் தொற்று அதிகரிப்பு

Gavitha   / 2021 ஜனவரி 05 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறுமுகம் சுதா

மாத்தளையில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 173ஆக அதிகரித்துள்ளது என்றும் எனவே, சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் கடுமையாகப் பின்பற்றவேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்புப் பிரிவுக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி மாவலகேயின் தலைமையில், மாத்தளை மாவட்ட கேட்போர் கூடத்தில், மாத்தளை பிரதேச சுகாதார பிரிவினரால் இன்று (05) நடத்தப்பட்ட கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், நேற்றுடனான கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 21 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .