2025 மே 08, வியாழக்கிழமை

மாத்தளையில் விழிப்படைந்த பொதுமக்கள்

Gavitha   / 2020 நவம்பர் 09 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

மாத்தளை மாவட்டத்தில், கொரோனா தொற்றின் நிலமை தொடர்பாக, பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வந்த விழிப்புணர்வு நடவடிக்கை காரணமாக, மாத்தளை மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைக்கழுவுதல் போன்ற விடயங்களுக்கு, மக்கள் அதிகளவு தற்போது பழக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது, முன்னரை விட சாதகமாண நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் மக்களின் ஒத்துழைப்பு அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையும் இலகுவடைந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X