R.Maheshwary / 2022 ஜனவரி 07 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை மாவட்டத்தில் விசேட தேவையடைய பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த, மருந்து கவர்களை தயாரிக்கும் திட்டமானது, இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விசேட தேவையுடைய குழந்தைகளின் பெற்றார் சங்கம் தெரிவித்துள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் அதிகளவான விசேட தேவையடைய பிள்ளைகள் இருப்பதுடன், இந்தப் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களின் பொருளாதரத்தை மேம்படுத்துவதற்காகவே, இவ்வாறான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு தயாரிக்கப்படும் மருந்து கவர்கள் மத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ள நிலையிலே, இத்திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநருக்கு பெற்றோர் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதுடன்,இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .