2025 ஜூலை 30, புதன்கிழமை

மான் இறைச்சியுடன் மூவர் கைது

பாலித ஆரியவன்ச   / 2017 ஜூலை 18 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, மலங்கமுவ ரம்புக்பொத பிரதேசத்தில்,  மான் இறைச்சியுடன் மூவரை, நேற்று  கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து 3 கிலோகிராம் மான் இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.

மஹியங்கனை கெசல்பொத, ஆராவ மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22,27 மற்றும் 33 வயதுடைய மூவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி மூவரும் தோட்டமொன்றில் நின்றுக்கொண்டிருந்த மானை பொல்லால் தாக்கி கொன்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .