Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
மாவா போதை பொருள் மற்றும் என்.சி புகையிலை டின்கள் ஒருத்தொகையை கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் பேரில் 6 பேரை கைது செய்துள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பஸ்தரிப்பிட பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சட்டவிரோதமாக மாவா போதை பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, இன்று (12) பிற்பகல் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சுற்றிவளைப்பின் போது 75 என்.சி.புகையிலை டின்கள் உட்பட சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு 80 பக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட ஒரு தொகை மாவா போதை பொருள் மற்றும் தயாரிப்புக்கான பொருட்களையும் பொலிஸார கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் உட்பட போதை பொருளை பணம் கொடுத்து வாங்கிய 5 இளைஞர்களுமாக 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக, வழக்கு பதிவு செய்து, ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .