R.Maheshwary / 2022 ஜூன் 19 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மின்சாரப்பட்டியல்களை வீதியில் வீசியமைத் தொடர்பில், ஹட்டன்- டிக்கோயா நகரசபையினரால் வழக்து தொடரப்பட்ட நபரிடமிருந்து அபராதத் தொகை அறிவிடப்பட்டுள்ளது.
ஹட்டன்- நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவரை பத்தாயிரம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்துமாறு, ஹட்டன் நீதவான் பருக்டீன் உத்தரவிட்டுள்ளார்.
ஹட்டன்- ஹிஜிராபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடமே இந்த அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர், ஹட்டன் நகரிலுள்ள குறுக்கு வீதியொன்றில், தனது வீட்டின் மின்சாரப்பட்டியல்களை வீசியிருந்தாகவும், இது தொடர்பில் ஹட்டன்-டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எஸ்.மெதவலவால் சந்தேகநபருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
8 minute ago
17 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
59 minute ago