2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மின்வேலியில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழ் உள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில், வீட்டிற்கு பின்புறத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாயொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (09) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதுடைய ஏ.எம்.சந்திரலதா   என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டார்கள் தங்களது மரக்கறி தோட்டத்தை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை சட்டவிரோதமாக பொருத்தியுள்ளனர்.

உயிரிழந்த பெண், ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்கு செல்லும் போது மின்சாரத்தை துண்டித்துவிட்டு செல்வதாகவும் இன்றைய தினம் அதனை துண்டிக்காது மறந்து சென்றதனால் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் நீதவானின் மேற்பார்வையின் பின், பிரேத பரிசோதனைக்காக,  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X