Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 31 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
மாத்தளை மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக, மிளகாய்த் தூள் வீசி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூவரை, நாவுல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பிரதேசங்களில், மேற்படி குழுவினர், பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கலேவெல, தல்கிரியாகம, பஹலவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31, 28, 21 வயதுடைய நபர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி, நாவுல-ஹெலஹெர வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், அந்நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன், சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் வழங்கியத் தகவலுக்கு அமைவாக, மேலும் இருவரை, பொலிஸார் நேற்று (31) கைதுசெய்ததுடன், கொள்ளைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளர்.
மேலும், சந்தேகநபர்களிடமிருந்து தங்கச் சங்கிலிகள் இரண்டையும், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நாவுல, ஹபுக்ஸ்ஸாய பிரதேசத்தில் இடம்பெற்ற தங்க ஆபரணக் கொள்ளைச் சம்பவத்துடன் மேற்படி குழுவினருக்குத் தொடர்பிருப்பதாகவும், பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்படி மூவரையும், நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
40 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
46 minute ago