Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்தப்போவதாக ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், ‘பாண் வரிசை’, ‘கூப்பன் முறை’ உள்ளடங்கலான பஞ்ச யுகத்தை நோக்கியே நாட்டை மீண்டும் அழைத்துச்செல்வதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ஆளுந்தரப்பின் முறையற்ற முகாமைத்துவம், உறுதியற்ற கொள்கைகளால் நாட்டு மக்களே பேராபத்தை எதிர்கொண்டுள்ளனர் என்றார்.
கண்டியில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து
வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர், “ அரசாங்கத்தின் தெளிவற்ற - உறுதியற்ற நிதி முகாமைத்துவ கொள்கையால் பெரும் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாக்கு பிடிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனை மூடிமறைப்பதற்கும், தற்காலிக சமாளிப்புக்காகவுமே வாகன இறக்குமதி தடை
செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கும் கோட்டா முறைமை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் உள்ளது.
எனவே, இன்னும் ஒரிரு மாதங்களில் இந்நாட்டில் உணவு பண்டங்களை பெறமுடியாத நிலைமை உருவாகும். 1970 களில் ஏற்பட்ட பஞ்சம்போல வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலையும், கூப்பன் முறைகூட அறிமுகப்படுத்தப்படலாம். தற்போதே பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இதைவிடவும் மோசமானதொரு நிலைமை உருவாவதை தடுக்க வேண்டும்.
இதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுகளை நடத்தி தீர்வு திட்டங்களை
வகுக்குமாறும், அப்போதுதான் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் எனவும்
அரசாங்கத்துக்கு நாம் ஆலோசனை வழங்கிவருகின்றோம். ஆனால் சர்வதேச நாணய
நிதியத்துடன் பேசமாட்டோம் என ஆளுந்தரப்பு முரண் பிடிக்கின்றது என்றார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago