Kogilavani / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா தொடக்கம் மீப்பிளிமானை வரையில் சேவையில் ஈடுப்படும் பத்துக்கும் மேட்பட்ட தனியார் பஸ்களின் சாரதிகள், நடத்துநர்கள், இன்று (22) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், நுவரெலியா பிரதான பஸ்தரிப்பிடத்துக்கு முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கண்டியிலிருந்து நுவரெலியா, பிளக்வூல் வழியாக உலக முடிவு பகுதிக்கு சேவையில் ஈடுப்படும் தனியார் பஸ், நேர ஒழுங்கை மீறி சேவையில் ஈடுபடுவதாகவும் இந்த பஸ்ஸைசேவையிலிருந்து நிறுத்துமாறும் கோரியே, பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபருக்கு, சுமார் ஒரு மாதத்துக்கு முன்பே சேவை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பஸ் சேவை, இன்று (22) காலை முதல் ஆரம்பமாகியுள்ளது.
கண்டியிலிருந்து நுவரெலியா பிலக்வூல் வழியூடாக, உலக முடிவு பகுதிக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லவே இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 7.50 மணியளவில் நுவரெலியாவிலிருந்து உலக முடிவுப் பகுதியை நோக்கி குறித்த பஸ் பயணிக்கும் வகையிலேயே நேரசுசி தயாரிக்கப்பட்டுள்ளது.
எனினும் நேரசுசியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்துக்கு முன்பாக, காலை 7.20 மணிக்கு, இந்த பஸ் சேவையில் ஈடுப்படுவதால், ஏனைய தனியார் பஸ் உரிமையாளர்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகள், நடத்துநர்கள் தெரிவித்துள்ளனர்.
நேர ஒழுங்கின்றி சேவையில் ஈடுபடும் பஸ்ஸை சேவையிலிருந்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தே, பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக நுவரெலியா தனியார் பஸ் சேவை சங்க தலைவர் சொர்ணபால கருணாநாயக்க தெரிவித்தார்.
இவ்விடயம் மாவட்ட முகாமையாளர் விஜய பண்டாரவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், மாவட்ட காரியாலயத்தின் ஊடாகவே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


7 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
18 minute ago