Janu / 2026 மார்ச் 16 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'மீளக் கட்டியெழுப்புவோம் ஸ்ரீலங்கா' (Rebuild Sri Lanka) வேலைத்திட்டத்தின் நிதியத்திற்கு, மஸ்கெலியா பிளான்டேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான மவுஸ்ஸாக்கலை தோட்டத் தொழிலாளர்கள் 135,000 ரூபாய் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
மவுஸ்ஸாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 135 தொழிலாளர்கள், தங்களது ஒரு நாள் சம்பளத்திலிருந்து தலா 1,000 ரூபா வீதம் சேகரித்த இந்தப் பணத்தை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர்.
எவ்வித போராட்டங்களுமின்றி தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உரிமைகளை வென்றெடுத்து கொடுத்தமைக்காக அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்த தொழிலாளர்கள், அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் பாற்சோறு உண்டு தமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.



45 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago