2025 ஜூலை 21, திங்கட்கிழமை

முகஞ்சுளிக்கச் செய்யும் நாற்றமெடுக்கும் குப்பைகள்

Freelancer   / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பிரதான பஸ் நிறுத்துமிடத்தை அண்மித்த பிரதேசங்கள் உரிய முறையில் சுத்தப்படுத்தப்படாமையால், பயணிகளும், மக்களும், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பெரும் ​அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குப்பைகளை முறையாக அகற்றாமையால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாற்றம் முகஞ்சுளிக்கச் செய்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். அதுமட்டுமன்றி கொசுக்கள் மற்றும் நுளம்புகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளன. பெருக்கமும் ஏற்பட்டுள்ளது என்றும் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஆகையால், ஹட்டன்-டிக்கோயா நகர சபையினர் மேற்படி விவகாரத்துக்கு தீர்வு காணவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இல்லையேல், பஸ்களுக்காக காத்திருக்கும் போது, நுளம்புகளின் கடிக்களுக்கு உள்ளாக நேரடியும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

                                                                                                                                                   சுதத் எச்.எம்.ஹேவா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X