Editorial / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான முத்து சிவலிங்கம், அடுத்த சந்ததிக்கு வாய்ப்புக் கொடுப்பதற்காக, அரசியலிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
எதிர்வரும் காலங்களில் நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஆசை, தனக்குக் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பாக, நேற்று (01), கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“எனக்கு வயது சென்றுகொண்டிருக்கின்றது. இதனால், முன்னர் தான் வேலை செய்ததைப் போன்று, ஓடியோடி வேலை செய்ய முடியாது. அது மாத்திரமல்லாது, அரசியலில் அடுத்தடுத்து வருவோருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்பது, எனது முக்கியமான நோக்கம்” என்று அவர் தெரிவித்தார்.
50 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026