2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

முன்னாள் கடற்படை வீரரிடம் பணம் கொள்ளை; மூவர் சிக்கினர்

Kogilavani   / 2021 ஜனவரி 05 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீ    

கம்பளையில் முன்னாள் கடற்படை வீரர் ஒருவரிடமிருந்து, 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட மூவரை, கம்பளை பொலிஸார் நேற்று முன்தினம் (4) கைதுசெய்துள்ளனர். 

கம்பளை நகருக்கு கடந்த 28ஆம் திகதி வருகை தந்த   முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர்,  வீடு நிர்மாணப் பணிகளுக்காக வங்கியிலிருந்து 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். அத்துடன் அவரிடம் ஏற்கெனவே 10 ஆயிரம் ரூபாயும் இருந்துள்ளது.

இந்நிலையில் பணத்தை எடுத்துக்கொண்டு கம்பளை நகரிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்துக்குச் சென்ற அவர், ஓட்டோ ஒன்றில் பயணித்துள்ளார்.

ஓட்டோவில் பயணித்தபோதே, அவரிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதுத் தொடர்பில் கம்பளை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், 23,27, 39 வயதுடைய மூவரை கைதுசெய்துள்ளனர்.

கொள்ளையடித்த பணத்தில் 75 ரூபாய்க்கு ஓட்டோவொன்றை வாங்கியுள்ள மேற்படி மூவரும் ஏனைய பொருட்கள் பலவற்றையும் கொள்வனவு செய்துள்ளனர்.
மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X