2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்குவதில் இழுபறி

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ்

மாத்தளை மாநகர சபையின் கீழ் செயற்பட்டு வரும் முன்பள்ளிகளின் ஆசிரியைகளுக்கு, கடந்த நான்கு மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று, மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பாலித ஜயசேகர, மாநகர சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

மாத்தளை மாநகர சபையின் மாதாந்த அமர்வு, நகரசபைத் தலைவர் டல்ஜின் அலுவிஹார தலைமையில், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போது மேலும் கூறிய அவர், மாத்தளை மாநகர சபையின் கீழ், 11 முன்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றனவெனச் சுட்டிக்காட்டியதுடன், இந்தப் பள்ளிகளில், 16 ஆசிரியைகள் கடமையாற்றி வருகின்றனர் என்றும், இவர்களுக்கே, கடந்த நான்கு மாதங்களுக்கானக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

குறித்த பள்ளிகளில் 200-300க்கும் மேற்பட்ட சிறுவர்கள், கல்வி பயின்றுவருகின்றனர் என்றும், எனவே இந்தச் சிறுவர்களுக்கு, ஆரம்பக்கல்வியைப் போதிக்கும் ஆசிரியைகளுக்கு, முறையாக கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சபைத்தலைவருக்கு எடுத்துரைத்தார்.

இவ்விடயம் தொடர்பில், மாத்தளை மாநகர ஆணையாளரினூடாக ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சபைத் தலைவர் டல்ஜின் அலுவிஹார, ஆளுநரின் அனுமதியுடன், கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு, நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .