Editorial / 2023 ஓகஸ்ட் 04 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டம் ஹங்குராங்கெத்த சுகாதார பிரதேசத்திற்கு உட்பட்ட கோனப்பிட்டிய பிரதேச வைத்தியசாலையை மூடுவதற்கு இடமளிக்கமாட்டோம் என கோரி கோணப்பிட்டிய பிரதேச மக்கள் வௌ்ளிக்கிழமை (04) தமது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
கோணப்பிட்டிய பிரதேசம் கஷ்ட்ட பிரதேசம் என்பதனால் இப்பிரதேச மக்களுக்கான சுகாதார சேவையை இலகுப்படுத்தும் நோக்கில் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான், அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இந்த தோட்ட வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக அன்றைய அரசாங்கத்தினால் தரமுயர்த்தப்பட்டது.
இவ் வைத்தியசாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர்.
அத்துடன் இவ் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வசதிகளும் உள்ளதுடன்,மகப்பேறு சிகிச்சைகளும் நடைபெற்று வருகிறன.
இரண்டு வைத்திய அதிகாரிகள் கொண்டு இயங்கி வந்த இவ் வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் பதவி விலகி வெளிநாடு சென்றதன் பின் தற்போது ஒரு வைத்திய அதிகாரி மற்றும் ஊழியர்கள் கொண்டு இயங்குகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வைத்தியசாலை நிர்வாகத்தில் பணியாற்றும் பெயர் குறிப்பிடாத ஒருவர் இந்த வைத்தியசாலையை மூடுவதற்கு திட்டமிடப்படுவதாக பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இவ் வைத்தியசாலையை மூடிவிட இடமளிக்க கூடாது என ஒன்று திறன் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட வைத்திய சேவை பணிப்பாளரிடம் வினவியபோது கோணப்பிட்டிய பிரதேச வைத்தியசாலை மூடப்படாது. அதேநேரத்தில் சேவை நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என தெரிவித்தார்.
இவரின் இந்த தகவல் வெளியாகியிருந்தது சரியான உண்மை தெரியும் வரை தாம் எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்து, முதல் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட்டு கலைந்து சென்றனர்.





5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago