2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மூன்று மாடுகளுடன் லொறி சாரதி கைது

Freelancer   / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்

அனுமதிப்பத்திரம் இன்றி, மூன்று மாடுகளைசட்டவிரோதமான முறையில் லொறியொன்றில் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டின் கீழ், அந்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா பொலிஸாரினால் இவர், வியாழக்கிழமை (06)  கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பேவெல விலங்கு பண்ணையில் ,மூன்றுமாடுகளை விலைக்கு கொள்வனவு செய்து, நானுஓயா நகரிலுள்ள மாடு அறுக்கும் இடத்துக்கு, கொண்டு வந்து கொண்டிருந்தபோது, இரவு வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். லொறியும் ​பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்த மூன்று மாடுகளின் கால்களையும் சந்தேக நபர் அடித்து உடைத்துள்ளார். அத்துடன், மூன்று மாடுகளை ஏற்றிச்செல்லும் அளவுக்கு அந்த லொறியில் இடவசதிகள் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சாரதியை மூன்று மாடுகள் மற்றும் லொறியுடன் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X