2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மூன்று வான் கதவுகள் திறப்பு

Gavitha   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

புரெவி சூராவளி காரணமாக, மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மஹாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதால், பொல்கொல்லை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள, இன்று (03) அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளன என, நீர்த்தேக்கத்துக்கு பொறுப்பான பொறியியலாளர் அதுல புஷ்பகுமார தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று கருத்துத் தெரிவித்த அவர், இந்த மூன்று வான்கதவுகளும் ஒன்றரை அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது என்றும் இதனூடாக, விநாடிக்கு 6,500 சதுர அடி நீர் கங்கைக்கு வெளியேறும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, கங்கைக்கு அருகில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X