2025 மே 19, திங்கட்கிழமை

மேலதிக படைகளை களத்தில் இறக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டின் காரணமாக கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கெட்டபுளா அக்கரவத்த தோட்டத்தில் ஆற்று வெள்ளத்தால் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தவர்களை  மீட்க மேலதிக படைகளை களத்தில் இறக்க வேண்டுமென படை அதிகாரிகளுக்கு ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் லக்ஷபான பொல்பிட்டி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு வயது சிறுமியும் அவரது பாட்டியும்  அனர்த்ததில் உயிரிழந்தன அதைபோல  கெட்டபுளா அக்கரவத்த தோட்டத்திற்கு சென்று அனர்த்தத்தில் உயிரிழந்த  குடும்பங்களை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான்  நேரில்  பார்வையிட்டு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் கடந்த முதலாம் திகதி தொழிலுக்கு சென்று மாலை ஆற்று வழியாக வீடு திரும்பிய நிலையில் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மூவர் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில்  கெட்டபுளா கீழ்பிரிவு அக்கருததை தோட்டத்தை சேர்ந்த (45) வயதுடைய விஜயலட்சுமி,(51) வயதுடைய சத்தியசீலன் மற்றும் (35) வயதுடைய சந்திரமோகன் ஆகியோரே ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இவர்களை தேடும் பணியில் நாவலப்பிட்டிய பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மீட்டு பணியில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில் மேலும் தேடும் பணிக்காக மேலதிக இராணைவத்தினரையும்,அதிரடிப்படையினரையும் மீட்பு பணியில் ஈடுப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் படை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X