Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நதீக பண்டார
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்ட சு.க உறுப்பினர்களுக்கு எதிராக, சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து வருவது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதெனத் தெரிவிக்கும் தேணுக விதானகமகே எம்.பி, அதன் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான ஒப்பந்தமொன்று இருக்கலாமெனவும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சுதந்திர கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்கு சென்ற எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், சுதந்திர கட்சியிலிருந்து ஐக்கியத் தேசியக் கட்சிக்கு இன்று வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
சுதந்திர கட்சிக்காக நேர்மையாக உழைப்பவர் எனின் அக்கட்சியின் செயலாளார் தயாசிறி ஜயசேகர, மஹியங்கனை தொகுதியில் கம்பெரலிய திட்டத்தை செயற்படுத்தி கொண்டிருக்கும் லக்ஸ்மன் செனவிரத்ன எம்.பிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அவ்வாறிருக்க சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் கைகோர்க்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும் அதற்கு மாறாக செயற்படும் சில குழுக்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026