Editorial / 2018 ஜனவரி 30 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
நாவுல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை, தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு, நாவுல நீதவான் நீதிமன்ற நீதவான் சுரங்க முனசிங்க, திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார்.
மேலும் இவ்வழக்கை, எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் இருவருக்கே, இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இருவரும், நாவுல மற்றும் போபெல்ல ஆகிய பிரதேசங்களிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரு காரியாலயங்களுக்குள் நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன், நாற்காலிகள் பலவற்றையும் திருடிக்கொண்டுச் சென்றுள்ளனரென, நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், நாவுல- கரவிலஹேன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுயேட்சைக் குழுவின் காரியாலயம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயம் ஆகியவற்றுக்குள் நுழைந்து, கட்சியின் கொடிகளை சேதப்படுத்தியுள்ளதுடன், பொருட்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
35 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago