2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மொனராகலை மாவட்டத்தில் 3,87,016 பேர் வாக்களிக்கத் தகுதி

R.Maheshwary   / 2023 ஜனவரி 09 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்காக மொன​​ராகலை மாவட்டத்தில் 3,87,016 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என மொனராகலை உதவித் தேர்தல் ஆணையாளரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான நாகலிங்கம் ரேகன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மொனராகலை தொகுதியில் 11 உறுப்பினர்களும் சியம்பலாண்டுவ தொகுதியில் 14 உறுப்பினர்களும் படல்கும்பர தொகுதியில் 11 உறுப்பினர்களும் புத்தல தொகுதியில் 11 உறுப்பினர்களும் கதிர்காமம் தொகுதியில் 9 உறுப்பினர்களும் வெல்லவாய தொகுதியில் 14 உறுப்பினர்களும் தனமல்வில தொகுதியில் 20 உறுப்பினர்களும் பிபிலை தொகுதியில் 10 உறுப்பினர்களும் மெதகம தொகுதியில் 10 உறுப்பினர்களும் மடுல்ல தொகுதியில் 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்றார்.

பிரதேச சபை ரீதியில் மொனராகலை தொகுதியில் 40,881 வாக்காளர்களும் சியம்பலாண்டுவ தொகுதியில் 46,221 வாக்காளர்களும் படல்கும்பர தொகுதியில் 35,405 வாக்காளர்களும் புத்தல தொகுதியில் 44,326 வாக்காளர்களும் கதிர்காமம் தொகுதியில் 14,870 வாக்காளர்களும் வெல்லவாய தொகுதியில் 52,379 வாக்காளர்களும் தனமல்வில தொகுதியில் 59,420 வாக்காளர்களும் பிபிலை தொகுதியில் 35,590 வாக்காளர்களும் மெதகம தொகுதியில் 31,540 வாக்காளர்களும் மடுல்ல தொகுதியில்26,879 வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .