Editorial / 2019 செப்டெம்பர் 04 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், மலையக மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தை வைத்து, பல கட்சிகள் அரசியல் நடத்துவதாக, இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் அருண்காந்த் தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின், பஹத்த ஹேவாஹெட்ட பிரதேச மகளிர் அமைப்பாளர்களுக்கான மகளிர் மாநாடு, தெல்தோட்டையில் நேற்று (03) நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தமிழகத் தலைவர்களான தமிழிசை சௌந்திரராஜன், இல.கணேசன், தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் ஆகியோரை, நாடு முழுவதும் அழைத்துச்சென்று தமிழ் மக்களின் அவல நிலையைக் காண்பித்ததாகவும், சுமார் 200 வருடங்கள் பழமையான தோட்டக்குடியிருப்புகளை பார்த்து, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் என்றும் தெரிவித்தார்.
இதன்பின்னர், தமிழக தலைவர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்ட பின்னரே, இலங்கையின் இந்திய வீட்டுத்திட்டத்துக்கு, அவர் நிதியொதுக்கீடு செய்ததாக அவர் கூறினார்.
அப்போது, ஒரு அரசியல் கட்சியாக அல்லாமல், ஒரு அமைப்பாகவே தாம் செயற்பட்டு வந்ததாகவும் ஆனால், தற்போது இந்த வீட்டுத்திட்டத்தை வைத்து, பலர் அரசியல் நடத்துவதாகவும் அவ்வாறு செய்பவர்களுக்கு, இந்த வீட்டுத்திட்டம் எவ்வாறு வந்தது என்றே தெரியாது என்றும் கூறினார்.
இவையனைத்துக்கும் மேலாக, வீடுகள் அனைத்தையும் தரமற்ற விதத்தில் நிர்மாணித்துவிட்டு, மில்லியன் கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் கஷ்டத்துக்கு மத்தியில் கொண்டு வந்த வீட்டுத்திட்டம், தரமானதாக இல்லை என்பது, கவலைக்குரியது என்றும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago