2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் திருட்டு; சீசீடிவியின் உதவியுடன் விசாரணை

Kogilavani   / 2017 நவம்பர் 12 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

 

ஹட்டன் நகரில் வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் திருட்டுடன் தொடர்புடையவரை, சீசீடிவியுடன் உதவியுடன் கைதுசெய்யும் நடவடிக்கையில், ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

ஹட்டன் டன்பார் நகர பகுதியிலேயே, இச்சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.

மேற்படி வர்த்த நிலையத்தில் தொழில்புரிந்து வரும் இளைஞர் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளை, வர்த்தக நிலையத்துக்கு முன்பாக  நிறுத்தி வைத்திருந்தபோதே,  இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.

மேற்படி இளைஞன் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக, வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவியின் உதவியுடன்,  ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .