2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

மோதல் தொடர்பில் விசாரணைக்குழு நியமனம்

Editorial   / 2017 ஜூலை 01 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

கொட்டகலை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், விசாரணைகள் குழு நியமித்துள்ளதாகவும் விசாரணையின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம். ராமேஸ்வரன் தெரிவித்தார். 

நேற்று இடம்பெற்ற குழு மோதலில், தாக்குதலுக்கு இழக்காகிய பொற்றோர் ஒருவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் ஒருவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 31ஆம் திகதி குறித்த பாடசாலையின் காலைக்கூட்டத்துக்கு வருகைத்தராத சில மாணவிகளை ஆசிரியர் ஒருவர் தாக்கியமை தொடர்பில் பொற்றோர்களினால் நேற்றுக் காலை பாடசாலைக்கு விசாரிப்பதற்கு சென்றுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், மாணவர்கள்  பொற்றோர்களை தாக்கியதாகவும் பொற்றோர்களின் தாக்குதலில் ஆசிரியர் ஒருவரும் காயமுற்றுள்ளதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 

தாக்குதலுக்கு இழக்காகிய ஆசிரியர்  ஒருவரும் பெற்றோர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு பத்தனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். 

 சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,

கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கல்வித்திணைக்கள அதிகாரிளும் பாடசலைக்கு உடனடியாக விஜயம் செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். 

மேலும், இவ்வாறான தாக்குதல் சம்பவம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் நுவரெலியா பிரதேச பாடசாலையிலும் இடம்பெற்றுள்ளதால் விசாரணைக்குழுவின் அறிக்கையின் பின்னர் சம்பந்தப்படவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .