Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கணேசன்
அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை, மவுண்ட்ஜின் தோட்டம், உடன் அமுலுக்கு வரும் வகையில், நேற்று (28) பிற்பகலில் இருந்து முழுமையாக முடக்கப்பட்டது
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த மவுண்ட்ஜின் தோட்டத்தில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
இந்நிலையிலேயே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மவுண்ட்ஜின் தோட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அத்தோட்டத்தில் இருந்து வெளியேறுவதற்கும், வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளே செல்வதற்கும் முழுமையாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இத்தோட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.. வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 59 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டிலுக்காக காத்திருப்பு
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு, ஒருசில மணித்தியாலங்களில் அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் நிலையில், மலையகத்தில் இந்நிலைமை தலைகீழாகவே உள்ளன எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்ட வட்டவளை - மவுண்ட்ஜின் தோட்டத்தில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களும் வெளியில் தாராளமாக உலவுகின்றனர் எனப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில், அம்பகமுவ பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் காமதேவனிடம் வினவியபோது, “ஒலிபெருக்கிகளின் உதவியுடன் அத்தோட்ட மக்களைத் தெளிவுபடுத்தி வருகின்றோம். எனினும், சிலர் கவனம் செலுத்துவதில்லை. அவ்வாறானவர்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றோம்” என்றார்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து, பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம் வினவியபோது,
“சிகிச்சை மத்திய நிலையங்களிலுள்ள கட்டில்களுக்கு அமையவே, தொற்றாளராக அடையாளம் காண்பவர்களை, விரைவாக அழைத்துச் செல்வது தீர்மானிக்கப்படும்” என்றார்.
சிகிச்சை நிலையங்களில் கட்டில்கள் வெற்றிடமாக இருக்கும் சந்தர்ப்பத்திலேயே, தொற்றாளர்கள் அழைத்துச் செல்லப்படுவர். அத்துடன், அம்பியூலன்ஸ் வண்டிகளில் சாதாரண நோயாளர்களும் அழைத்துச் செல்லப்படுவதால், தொற்றாளர்களை அழைத்துச் செல்வதற்கான, தனியான அம்பியூலன்ஸ்களுக்கும் பற்றாக்குறை நிலவுகின்றன எனத் தெரிவித்த அவர், சிலவேளைகளில் 48 மணித்தியாலங்களுக்குள் தொற்றாளர்கள் அழைத்துச் செல்லப்படுவது அவசியம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago