2025 ஜூலை 16, புதன்கிழமை

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது

Sudharshini   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டியில் உள்ள பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களை இழக்குவைத்து விநியோகிப்பதற்காக கொண்டுவந்த 12.4 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேகத்தின்பேரில் இருவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விருவரில் ஒருவர், குருநாகல் பிரதேசத்திலிருந்து கஞ்சாவை கொண்டு வந்தவர் என்றும் மற்றவர், அவற்றை பொதிசெய்தவர் என்றும் அறியமுடிகின்றது.

கண்டி பொலிஸாரினால் நேற்று (11) கைதுசெய்யப்பட்ட இருவரில், கஞ்சாவை பொதி செய்துகொண்டிருந்த 18 வயதானவரிடமிருந்து 5,800 மில்லிகிராம் கஞ்சாவும் 19 வயதானவரிடமிருந்து 6,800 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பக்கற்றொன்று 300 ரூபாய் வீதம் விற்கப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

சந்தேக நபர்களிடம் கட்டுகஸ்தோட்டை  பிரதேசத்தை சேர்ந்த பிரதான பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் கஞ்சாவை கொள்வனவு செய்ததாக அறியமுடிகின்றது.

அந்த நான்கு மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொலிஸார், பெற்றோருக்கு அறிவுரை கூறியதுடன் கல்வியில் நாட்டம் செலுத்தவேண்டும் என்று மாணவர்களுக்கு புத்திமதி கூறி அனுப்பிவைத்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும்  கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X