Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கங்கள் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமெனக்கோரி பொகவந்தலாவை பிரதான பஸ் நிலையத்துக்கு அருகில் இன்று (14) சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் அம்பகமுவ தொகுதி அமைப்பாளர் பி.கல்யாணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவைப் பிரதேச தோட்டத் தலைவர்கள் மற்றும் தோட்டத் தலைவிகள் கலந்துகொண்டனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்த தொழிற்சங்கங்கள், தோட்டக் கம்பனிகளுடன் இதுவரை ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் எதையும் நடத்தவில்லை. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் பொறுப்பற்று நடந்து கொள்கின்றன.
தொழிலாளர்களின் நியாயமான சம்பள அதிகரிப்புக்காக முதலாளிமார் சம்மேளனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 minute ago
30 minute ago